சுங்கை பெசார்:
கோம்பால், பத்து 11 பகுதி வீடுகளை காலி செய்யப்படும் விவகாரம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்துவது உட்பட சிலாங்கூர் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்தார்.
குறிப்பாக இம்மாதம் 10ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்த சிலாங்கூர் வன இலாகாவின் இரண்டாவது நோட்டீசை குடியிருப்பாளர்கள் பெறுவதற்கு முன்னதாக தேதி ஒத்திவைப்பு செய்யப்படும் நடவடிக்கையும் இதில் அடங்கும்.
இதில் இருக்கின்ற தர அம்சங்களை வலுப்படுத்துவதற்கு நில மேம்பாட்டாளர் தரப்புடனான பேச்சு வார்த்தையில் எங்கள் தரப்பு மத்தியஸ்தராக செயல்படும் என்றார் அவர்.
மேலும் இங்குள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த நிலத்தில் குடியிருக்கவில்லை. இது வனப்பகுதி நிலமாகும்.
பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் பதில் வழங்குவோம். மாநில அரசாங்கத்தின் மனிதாபிமான கொள்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தை முறையில் குடியிருப்பாளர்களுக்கு உதவ முற்படுகிறோம் என்றார் அவர்.




