நீண்ட நேரத்திற்கு அதிக அளவு வெப்பநிலைகளுக்கு வெளிப்படுத்தும்போது கான்கிரீட் மற்றும் உலோகங்கள் போன்றவை தொடர்ச்சியாக விரிவடைந்து சுருங்கும். இந்த வெப்ப அழுத்தமானது விரிசல்கள் மற்றும் மோசமான சேதங்களை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் உங்களுக்கு ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ் உதவக்கூடும். வியாபாரம் சம்பந்தப்பட்ட சொத்து, ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ் அல்லது தனி வீடு என்று எதுவாக இருந்தாலும் தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளின் போது பொருளாதார பாதுகாப்பு வழங்குவதற்கு இவை உதவுகின்றன.
ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?:
அதிகரித்து வரும் கோடைகால வெப்பநிலையானது தீ விபத்து ஏற்படுத்துவதற்கான அபாயங்களை அதிகரிக்கலாம். வயரிங் கோளாறுகள், ஓவர்லோடட் சர்க்யூட்டுகள் மற்றும் அதிக அளவு வெப்பமாகும் சாதனங்கள் ஆகியவை தீ விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் உங்களுக்கு ஃபயர் இன்சூரன்ஸ் உதவும். வழக்கமாக ஃபயர் இன்சூரன்ஸ் என்பது தீ விபத்து காரணமாக அலுவலகம், அலுவலகத்தில் உள்ள பொருட்கள், உற்பத்தி இயந்திரங்கள், சேமித்து வைக்கப்பட்டுள்ள சரக்குகள், எலக்ட்ரானிக் சிஸ்டம், பைப் லைன்கள் மற்றும் தடைபட்டுள்ள தொழில் போன்ற அனைத்திற்குமான காப்பீடுகளை வழங்குகிறது.
தீ விபத்து, மின்னல், குண்டுவெடிப்பு, இயற்கை சீற்றங்கள், நிலச்சரிவு, காட்டுத்தீ போன்றவற்றுக்கான பாதுகாப்பை இந்த பாலிசிகள் வழங்குகின்றன. பொதுவாக நிலநடுக்கங்கள், காட்டுத்தீ அல்லது தீ விபத்து போன்றவற்றிற்கான கூடுதல் காப்பீட்டை பல தொழில்கள் வைத்திருப்பதுண்டு.
கிடைக்கக்கூடிய பாலிசிகளின் வகைகள்?:
இந்தியாவில் செயல்பட்டு வரும் தொழில்களுக்கு பின்வரும் பாலிசிகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்:-
இண்டஸ்ட்ரியல் ஆல் ரிஸ்க் பாலிசி:
பாரத் லகு உதயம் சுரக்ஷா அல்லது பாரத் சூட்சம உதயம் சுரக்ஷா:
இது சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பாலிசி. எவற்றிற்கு காப்பீடு பெற முடியாது? இந்த ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸில் எந்தெந்த ஆபத்துகளுக்கு காப்பீடு வழங்கப்படாது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட சேதம், மின்சார கசிவு, மாசுபாடு, அடுத்தடுத்து ஏற்படும் இழப்புகள், ஒரு இடத்தை காலி செய்த பிறகு ஏற்படும் சேதம் (30 நாட்களுக்கு மேல்), நேரடி ஷார்ட் சர்க்யூட் சேதம், போர் போன்றவற்றிற்கு காப்பீடு பெற முடியாது.
பிரீமியம் தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?:
இந்தியாவில் ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸிற்கான தொகை என்பது இன்சூரன்ஸ் இன்ஃபர்மேஷன் பியூரியா மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கான விலை என்பது தொழிற்சாலையின் வகை, இதற்கு முன்பு ஏற்பட்ட இழப்புகள் சம்பந்தப்பட்ட பதிவேடுகள் மற்றும் புயல் அல்லது நிலநடுக்கம் போன்ற கூடுதல் ஆபத்துகள் காப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பொறுத்து அமையும்.
கோடை வெப்பத்தால் சொத்துக்கு ஏற்படும் சேதம்… காப்பீடு வழங்கும் ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா?

