இந்த மலர் கண்காட்சியில் ஓட்டு மொத்தமாக 2 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் பொன்னியின் செல்வன் அரண்மனை, நுழைவுவாயில், கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னபறவை ரதம் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மலர் கண்காட்சியை காணவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக ஊட்டியை நோக்கி படையெடுத்துள்ளது.

