இந்தியாவில் இன்று வெற்றிகரமாக இருக்கும் பல தொழிலதிபர்கள் தங்கள் குடும்ப தொழிலை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். இவர்களது தாத்தாவும், தந்தையும் நடத்தி வந்த தொழிலை தங்கள் வருகைக்குப் பிறகு பல மடங்கு விரிவாக்கம் செய்து பல மடங்கு லாபத்தை அடையச் செய்துள்ளனர். இதுபோன்ற பல இளம் தொழிலதிபர்களை நம் நாட்டில் உதாரணமாக காண்பிக்கலாம். அப்படி ஒருவர்தான் கார்த்திக் பாரத் ராம். பல வகைப்பட்ட கெமிக்கல் தயாரிக்கும் நிறுவனமான SRF லிமிடெடின் கூடுதல் மேலாண்மை இயக்குனராக இருக்கிறார் கார்த்திக் ராம். மார்ச் 12-ம் தேதி நிலவரப்படி இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.71,729 கோடியாகும்.
இந்திய கோடீஸ்வர நபர்களில் ஒருவரும் SRF லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான அருன் பாரத் ராமின் மகன் தான் கார்த்திக் ராம். ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலின் படி அருன் பாரத் ராமின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.27,310 கோடியாகும். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா க்ளாரா பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள கார்த்திக், நியூயார்க் நகரத்தில் உள்ள பிரபலமான கார்னெல் பல்கலைகழகத்தில் எம்பிஏ படிப்பை முடித்துள்ளார்.
படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் கார்த்திக்கிற்கு ஆர்வம் அதிகம். பெரும்பாலானவர்கள் கிரிக்கெட், கால்பந்து என விளையாடிக் கொண்டிருக்க இவருக்கு கோல்ஃப் விளையாட்டின் மீது கொள்ளைப் ப்ரியம். இந்த விளையாட்டில் சிறந்து விளங்கிய அவர், பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிக்கோப்பைகளையும் பெற்றுள்ளார். இவருடைய சகோதரர் ஆசிஷ பாரத் ராம் SRF லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக தற்போது செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க:
சுகர் இல்லாத பிஸ்கட் ஐடியா.. ரூ.2000 கோடி மதிப்பு நிறுவனத்துக்கு ஓனரான 60 வயது முதியவர்.. யார் இவர்?
நிறுவனத்தின் கூடுதல் மேலாண்மை இயக்குனராக இருக்கும் கார்த்திக், நிறுவனத்திற்குள் பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் பலப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இதோடு சேர்த்து நிறுவனத்தின் மனிதவளத் துறை, தரக்கட்டுப்பாடு மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறையும் இவரது மேற்பார்வையின் கீழ்தான் செயல்படுகிறது.
இதுதவிர SRF நிறுவனம் பெரும்பான்மை பங்கை வைத்துள்ள KAMA ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார் கார்த்திக். மேலும் பள்ளிக் கல்வித்துறையின் கன்சல்டன்சி துறையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ எடுகேர் நிறுவனத்தின் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார் கார்த்திக் ராம்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஃப்ளோரோ கெமிக்கல்ஸ், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ், பேக்கேஜிங் ஃப்லிம்ஸ் மற்றும் பல துறைகளில் இவருடைய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2022-ம் நிதியாண்டில் இவருடைய நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.12,313 கோடியாகும். இந்தியா தவிர தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, ஹங்கேரி போன்ற நாடுகளிலும் செயல்பட்டு வரும் SRF நிறுவனத்திற்கு 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…