“டித்வா” புயலால் சேதமடைந்த வடக்கு தொடருந்து பாதையை சீரமைத்த பின்னர் யாழ்ப்பாணம் – காங்கேசந்துறைக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் தொடங்கவுள்ளது.
குறித்த சேவையானது, எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
புயலின் காரணமாக, வடக்கு தொடருந்து பாதையில் உள்ள 14 தொடருந்து நிலையங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில்,
அதனை தற்காலிக பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், 2025/12/24 முதல் தொடருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியது.
நிரந்தர சீரமைப்புப் பணிகள்
கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் இடையேயான தொடருந்து சேவைகள் குறைக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டன.
அதன்படி, புயலால் சேதமடைந்த 14 தொடருந்து நிலையங்களில் நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக, வடக்கு தொடருந்து பாதை 2026/01/19 முதல் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும், சீரமைப்புப் பணிகள் இந்திய அரசாங்கத்திடமிருந்து 5 மில்லியன் டொலர் மானியத்துடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

