• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கொழும்பு பஸ் சாரதிகளில் 60% பேர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கொழும்பு பஸ் சாரதிகளில் 60% பேர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும்  பஸ் சாரதிகளில் சுமார் 60 சதவீதம் பேர் கடுமையான போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

2025ஆம் ஆண்டில் மட்டும் 2,700 வீதி விபத்துகள் பதிவாகி, அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் சுமார் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகள் எனவும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதம் ஆண்கள் எனவும் அவர் கூறினார்.

விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், சுமார் பாதி விபத்துகளுக்கு சாரதிகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சாரதிகளில் பெரும்பாலானோர் மதுபானம் அல்லது போதைப் பொருட்களை பயன்படுத்தியிருந்ததாகவும் அமைச்சர் விளக்கினார். பஸ் சங்கங்களின் தகவலின்படி, சாரதிகளில் சுமார் 60 சதவீதம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நடமாடும் பரிசோதனை அலகுகள் மூலம் 53 சாரதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 10 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், சோதனைகளுக்குப் பிறகு பல சாரதிகள் பணிக்கு வராமல் தவிர்த்ததால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

போதைப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பும் சாரதிகளுக்கு மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்படும் என்றும், அதனை மறுக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், முறையான பயிற்சி மற்றும் சிறப்பு அனுமதி பெறாமல் இனி எந்த சாரதிகளுக்கும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நேப்கின் – உச்ச நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

புதிய ஆயுதப்படைத் தளபதியாக மாலேக் ரசாக் நியமனம் | Makkal Osai

Next Post
புதிய ஆயுதப்படைத் தளபதியாக மாலேக் ரசாக் நியமனம் | Makkal Osai

புதிய ஆயுதப்படைத் தளபதியாக மாலேக் ரசாக் நியமனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin