கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இலக்கம் 5003 கொண்ட தொடருந்து தினமும் பிற்பகல் 3:50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு இரவு 10:28 மணிக்கு தலைமன்னாரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலக்கம் 5004 கொண்ட தொடருந்து மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு காலை 10:44 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடருந்து முன்பதிவு
இந்த தொடருந்து சேவை கம்பஹா, குருநாகல், மஹோ, அனுராதபுரம், மெதவச்சிய, மன்னார் நகரம் மற்றும் தலைமன்னார் நகரம் உள்ளிட்ட முக்கிய தொடருந்து நிலையங்களில் நின்று செல்லும்.

இருப்பினும், அனுராதபுரம் புதிய நகர தொடருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை அந்த நிலையத்தில் தொடருத்து நிறுத்தப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
இந்த தொடருந்து முன்பதிவு செய்யக்கூடிய வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட இரண்டு முதல் வகுப்புப் பெட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.பயணிகள் இதற்கான இருக்கைகளை seatreservation.railway.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது முன்பதிவு வசதிகள் உள்ள தொடருந்து நிலையங்களிலோ முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

