கொழும்பு நகருக்குள் நுழையும் பல பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள களனிப் பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்து நின்றுள்ளதால் இந்த நிலை ஏற்ப்ட்டுள்ளது.
இன்று (01) புதன்கிழமை காலை வேளையில் இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக வீதியின் ஒரு பகுதி முழுமையாகத் தடைப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தீவிர நடவடிக்கை
இதனால் கொழும்பு நகருக்குள் பணி நிமித்தம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக நுழைய முற்பட்ட வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் நீண்ட நேர தாமதங்களை எதிர்கொண்டு பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பழுதடைந்த கொள்கலன் லொறியை வீதியிலிருந்து அகற்றுவதற்கும், போக்குவரத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால், குறித்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

