சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 775 கிராம் தங்கத்துடன் மூன்று இந்தியப் பிரஜைகள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (16.10.2026) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத தங்கம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாஞ்சேனை காவல்துறையினர் இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் 30, 45 மற்றும் 50 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

