கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

