கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை (29) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதி, மஹரகம, பொரெலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை பகுதி மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, மொரட்டுவ மாநகரசபை பகுதிக்கு குறைந்த அளவிலான அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)
கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய


&w=1200&resize=1200,675&ssl=1)