கொழும்பு வத்தளை காவல்துறைபிரிவு, பள்ளியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று இரவு (23) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வத்தளை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

