ஹம்பாந்தோட்டை – வீரவில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததோடு, 40 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன சந்திப்பில் குறித்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இரண்டு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதியிதில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, திஸ்ஸாவிலிருந்து கரப்பிட்டியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை அரச பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

