Last Updated:
அதிகாலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அதிகாலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், லேக் டவுனில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை நட்சத்திர விடுதியில் இருந்தப்படியே மெஸ்ஸி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது இளைய மகன் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஹைதராபாத் செல்லும் மெஸ்ஸி, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் 7 பேர் கொண்ட கால்பந்துப் போட்டியில் விளையாடுகிறார். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
Kolkata,West Bengal
December 13, 2025 12:35 PM IST
கொல்கத்தா வந்த கால்பந்து ஜாம்பவான்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு… லேக் டவுனில் 70 அடி உயர சிலை திறப்பு


