Last Updated:
கில் தனது கழுத்தின் இடது பக்கத்தைப் பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார். அவரால் தலையைத் திருப்ப முடியவில்லை.
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 159 ரன்களிலும், இந்திய அணி 189 ரன்களிலும் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சின்போது 4 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக வெளியான தகவல், காயம் குறித்த கவலையை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் 35-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த பிறகு சுப்மன் கில் களமிறங்கினார். அவர் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரின் பந்தை ஸ்வீப் ஷாட் மூலம் பவுண்டரிக்கு அடித்தார்.
அதைத் தொடர்ந்து கில் தனது கழுத்தின் இடது பக்கத்தைப் பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார். அவரால் தலையைத் திருப்ப முடியவில்லை. உடனடியாக அணி மருத்துவர் களத்துக்கு வந்து சிகிச்சை அளித்தார்.
கில் தனது கழுத்தின் இடது பக்கத்தைப் பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார். அவரால் தலையைத் திருப்ப முடியவில்லை. உடனடியாக அணி மருத்துவர் களத்துக்கு வந்து சிகிச்சை அளித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்மன் கில்லுக்கு “கழுத்து தசைப்பிடிப்பு” ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் மோர்ன் மோர்கல் கில்லுக்கு ஏற்பட்ட இந்தக் காயத்திற்குக் காரணம், தொடர்ச்சியான போட்டிகளின் பணிச்சுமை அல்ல என்றும், அவர் மோசமாகத் தூங்கியதால் கழுத்துப் பிடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி வருவதால், அவரது உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
November 15, 2025 10:15 PM IST


