Last Updated:
ஷேன் வாட்சன் இதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் தலைமையில் பணியாற்றியுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. ஷேன் வாட்சன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்ட அபிஷேக் நாயர் மற்றும் ஆலோசகர் டிவைன் பிராவோ ஆகியோருடன் இணைந்து செயல்படுவார்.
ஷேன் வாட்சன் இதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் தலைமையில் பணியாற்றியுள்ளார். மேலும், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மூன்று ஆண்டுகள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்சனின் நியமனம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கடேஷ் மைசூர் கூறுகையில், “வாட்சன் போன்ற உயர்மட்ட வீரர் மற்றும் பயிற்சியாளரின் அனுபவம் அணியின் கலாச்சாரம் மற்றும் போட்டிக்கு தயாராகுவதில் மிகப்பெரிய மதிப்பை சேர்க்கும். டி20 ஃபார்மட்டில் அவரது புரிதல் உலகத் தரம் வாய்ந்தது” என்று கூறியுள்ளார்.
November 13, 2025 4:27 PM IST


