
கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி, அம்பலாங்கொடை நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.
அதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து, இந்தக் குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபர் பலாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்பதுடன், அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

