Last Updated:
காசியாபாத்தில் சேதன் குமார் குடும்பத்தின் மூன்று சகோதரிகள், கொரியன் கேமிங் Addict காரணமாக 9ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மொபைல் போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் 3 பேர் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாட்டையே உலுக்கி உள்ளது.
கொரியன் கேமிற்கு Addict ஆன மூன்று சகோதரிகள் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கோர சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கேம் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் மூவர், விபரீத முடிவெடுத்தார்களா? இல்லை கேமிங் டாஸ்கால் கற்பனையான ஒன்றை நிஜமென நினைத்து மரணத்தை தேடி கொண்டார்களா?. நடந்தது என்ன?.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் ‘பாரத் சிட்டி’ குடியிருப்பில் வசித்து வரும் சேதன் குமார் என்பவரின் மகள்கள் 12 வயதான பாக்கி, 14 வயதான பிராச்சி, 16 வயதான விஷிகா, மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேல் ஆன்லைன் கேமிங்கில் மூழ்கியுள்ளனர். பள்ளி நேரம் தவிர்த்து செல்போன்களில் மூழ்கிய மூவரும் படிப்பை கோட்டை விட்டு பெற்றோரின் பேச்சை காது கொடுத்து கேட்காமல் வரம்பு மீறியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் காய்ச்சல், தலைவலி என பொய் கூறி பள்ளிக்கு செல்வதை தவிர்த்த சகோதரிகள், அறையை பூட்டிக்கொண்டு செல்போனில் கேமிங் விளையாடி நேரத்தை செல்வழித்து வந்துள்ளனர். இதனால் நிலைமை மோசமாகி விட்டதை உணர்ந்த சிறுமிகளின் பெற்றோர் செல்போன்களை பிடுங்கி வைத்து கேம் விளையாடுவதை கண்டித்துள்ளனர். வீட்டில் இருக்கும் செல்போன்களுக்கும் நெட்வொர்க் ரீசார்ஜ் செய்யாமல் கேமிங் விளையாடுவதுற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
இதனால் கேம் விளையாட முடியாமல் தவித்த மூன்று சிறுமிகளும், பள்ளிக்கூடத்திற்கு போக முடியாது எனக்கூறி தாயிடம் பிடிவாதம் செய்துள்ளனர். அதற்கு இனியும் கேமிங் விளையாடினால் ஹாஸ்டலில் சேர்த்து விடுவோம் என அதட்டி படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தினர். அதில் மிகவும் சோகமடைந்த சிறுமிகள், வீபரித முடிவெடுத்து ஒட்டுமொத்த நாட்டையே கதிகலங்க விட்டுள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணிக்கு வீட்டில் நாற்காலி மீது ஏறி ஜன்னல் வழியாக ஒவ்வொருவராக மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
9ஆவது மாடியில் இருந்து கீழே குதிக்கும்போது சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு, சக குடியிருப்பு வாசிகள் கதிகலங்கி உறங்கத்தில் இருந்து எழுந்தனர். பெற்ற குழந்தைகள் கேமிங் விளையாட்டிற்கு அடிமையாகி செல்போனை கையில் எடுக்க கூடாது என கட்டுப்படுத்தியதால் மூவரும் தற்கொலை செய்து கொண்டது அவர்களது பெற்றோர்களை நடுநடுங்க வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் சிறுமிகளின் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் கேமிங் விளையாட்டிற்காக சிறுமிகள் தற்கொலை என்பது சந்தேகமாக இருப்பதாகவும், ஒருவேளை இது திட்டமிட்ட கொலையாக கூட இருக்கலாம் என சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் போலீசார் சிறுமிகளின் செல்போன்களை ஆய்வு செய்தும், பெற்றோரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டின் தாக்கம் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாமோ என்ற கோணத்தில் சந்தேகம் உள்ளது. தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதனால் விசாரணையின் முடிவிலேயே சிறுமிகளின் உயிரிழப்பில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரியன் கேமிற்கு Addict.. அடுத்தடுத்து 3 சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!


