Last Updated:
பிகாரில் 2 வயது சிறுவன் கோவிந்தா குமார், தனது கையில் இறுக்கமாக சுற்றிய நாகப் பாம்பை பல்லால் கடித்து கொன்றார்.
பிகாரில் 2 வயது சிறுவன் தனது கையில் இறுக்கமாக சுற்றிக் கொண்ட பாம்பை பல்லால் கடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு சம்பரன் பகுதியைச் சேர்ந்த கோவிந்தா குமார் என்ற 2 வயது சிறுவன் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நாகப் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனை பாம்பு என அறியாத அந்த சிறுவன் அதன் மீது கல் ஒன்றை எறிந்தார். சில விநாடிகளில் அந்த பாம்பு சிறுவனின் கையில் இறுக்கமாக சுற்றிக்கொண்டது.
உடனே பாம்பினை அச்சிறுவன் பலமாக கடித்ததாக தெரிகிறது. சத்தம் கேட்டு அங்கு வந்த சிறுவனின் பெற்றோர், குழந்தை மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் கையில் இருந்த பாம்பு இறந்து கிடந்துள்ளது. உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சிறுவன், பாம்பினை கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
July 27, 2025 10:59 AM IST
கையில் சுற்றிய பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன்.. அடுத்த நொடி நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் ஷாக்!