கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊழியரான நடராஜன் மோகன்ராஜ் (28) என்ற அந்த ஊழியர், தனது கைப்பேசியைப் பார்த்துக்கொண்டே லாரியை ஓட்டிச் சென்று காரில் மோதியதாக சொல்லப்பட்டுள்ளது.
இடிபாட்டில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் மரணம்… கட்டுமான நிறுவனத்துக்கு S$210,000 அபராதம்
இந்த சம்பவத்தில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த சட்டப் பேராசிரியரான 70 வயது டான் யோக் லின் காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்பர் தாம்சன் சாலையில் 2023 ஜூலை 7 அன்று நடந்த இந்த விபத்தில், பேராசிரியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அன்றைய தினமே இறந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய வேன் ஓட்டுநர் ஒருவருக்கும் விலா எலும்பு முறிவு உட்பட காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடராஜனின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு, 2024ல் இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் மற்றொரு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கைப்பேசியை பார்த்துக்கொண்டு கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய இந்திய ஊழியருக்கு நேற்று (ஆகஸ்ட் 29) இரண்டு ஆண்டுகள், ஒரு மாத சிறைத்தண்டனையும், S$2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் சிங்கப்பூரில் எந்த வகை மோட்டார் வாகனத்தையும் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்

