02

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் : ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.
&w=750&resize=750,375&ssl=1)
