துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில், புனரமைக்கப்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல் நகரில் உள்ள பெசிக்டாஸ் என்ற இடத்தில், 16 மாடி கொண்ட இரவு நேர கேளிக்கை விடுதியை மறுசீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், கட்டத்திற்குள் பணியாற்றி வந்த 29 பேர் தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து தொடர்பாக இரவு நேர கேளிக்கை விடுதியின் மேலாளர் உட்பட 5 பேரை கைது செய்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
