• Login
Tuesday, June 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 09, 2026 4:19 PM IST

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கு, கொச்சின் மினரல்ஸ் ரூட்டைல் லிமிடெட் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை 12ம் தேதி கொச்சியில் ஆஜராக சம்மன் அனுப்பியது

வீணா பினராயி விஜயன்
வீணா பினராயி விஜயன்

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணா, வரும் 12 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டைல் லிமிடெட் நிறுவனம், பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீடு மற்றும் கோழிக்கோட்டில் உள்ள அவரது மகள் வீணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், பினராயி விஜயனின் மகள் வீணா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் தலைவர் சசிதரன் கர்தாவிற்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || ’’ரெப்பர் உள்ளே, ரேப்பர் வெளியே’’

Next Post

ஊதியச் சீர்திருத்தத்திற்கு தொழில் துறையின் ஒப்புதலும், உற்பத்தித்திறனுடன் தொடர்பும் அவசியம் – பொருளாதார அமைச்சர்  – Malaysiakini

Next Post

ஊதியச் சீர்திருத்தத்திற்கு தொழில் துறையின் ஒப்புதலும், உற்பத்தித்திறனுடன் தொடர்பும் அவசியம் – பொருளாதார அமைச்சர்  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin