Last Updated:
பஞ்சாப் கிங்ஸ் வீரர் விஷ்ணு வினோத் 12 லட்சத்து 80 ஆயிரத்திற்கும், பசில் தம்பி 8 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்
கேரளா கிரிக்கெட் லீக்கின் 2ஆவது சீசனில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சஞ்சு சாம்சன். 6 அணிகள் பங்கேற்கும் கேரளா கிரிக்கெட் லீக் தொடர் ஆகஸ்ட் 22 தொடங்கி செப்டம்பர் 7 வரை நடைபெற உள்ளது.
இதற்கான ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் தலா 50 லட்சம் ரூபாய் வீரர்கள் ஏலத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் கொச்சி புளூ டைகர்ஸ் அணி சஞ்சு சாம்சனை 26 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
அதாவது மொத்த ஏலத்திற்கான தொகையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் அந்த அணி சஞ்சு சாம்சனுக்காக மட்டும் செலவு செய்துள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
July 05, 2025 4:32 PM IST