Last Updated:
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக, விசிக போட்டியிட திட்டமிட்டுள்ளன.
கேரளாவின் இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக, விசிக ஆகியவை திட்டமிட்டுள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோழா, பீர்மேடு ஆகிய வட்டங்களில் அதிகளவில் தமிழர்கள் தோட்டப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக திமுக இடுக்கி மாவட்டச் செயலாளர் கே.கே. ஜனார்தனன் தெரிவித்துள்ளார். அதேபோல், இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மும்முரம் காட்டி வருகிறது.
வண்டிப்பெரியார், பீர்மேடு, எலப்பரா, குமுளி ஆகிய தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாயத்துகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக விசிக கேரள மாநில செய்தித் தொடர்பாளர் ரிஸ்வன் கோயா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மெமலா வார்டில் அதிமுக வேட்பாளர் பிரவீனா வெற்றி பெற்றார். இருப்பினும், அதன் பின் அதிமுக சார்பில் கேரள தேர்தல்களில் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
November 07, 2025 10:16 PM IST


