மக்களிடமே நிதி திரட்டும் வேட்பாளர்: தனது நிதி நிலை குறித்துப் பேசிய ஆஷ்னா தம்பி, “வேட்புமனு தாக்கல் செய்த அன்று என்னிடம் அந்தப் பணம் மட்டும்தான் இருந்தது. நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் சார்ந்திருக்கும் கட்சி மக்களுக்கான இயக்கம். எனவே, தேர்தலுக்கான செலவுகளை மக்களிடமிருந்தே நிதியாகத் திரட்டி வருகிறோம். மக்களுக்காகப் பணியாற்றுவதால், அவர்களே எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


