• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம்: 4 மாநில இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது | 4 state by-elections

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம்: 4 மாநில இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது | 4 state by-elections
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கேரளா, குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது.

கேரளாவில் நிலம்பூர், மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச், பஞ்சாபில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நிலம்பூரில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், விசாவதரில் ஆம் ஆத்மி எல்ஏ புபேந்திர பயானி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் அவசியமானது.

இதுபோல் காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நசிருதீன் அகமது, மேற்கு லூதியானாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி, காடி தொகுதியில் பாஜக எம்எல்ஏ கர்சன் சோலங்கி ஆகியோர் மறைவால் இடைத்தேர்தலுக்கான கட்டாயம் ஏற்பட்டது. இத்தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஒருசில அசம்பாவிதங்கள் தவிர வாக்குப் பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் காலிகஞ்ச் தொகுதியில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவானது. இதுபோல கேரளாவின் நிலம்பூரில் 73.26 சதவீதமும், பஞ்சாப் மாநிலம் மேற்கு லூதியானாவில் 51.33 சதவீதமும், குஜராத் மாநிலம் காடியில் 64 சதவீதமும், விசாவதரில் 55 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

இத்தேர்தலில் முதல்முறையாக வாக்காளர்கள் தங்கள் மொபைல் போன்களை வாக்குச் சாவடிக்கு வெளியே பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. வரும் ஜூன் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || இரண்டு பெண்களையும் உங்களுக்குத் தெரியுமா?

Next Post

‘ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது’ – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சீற்றம் | Israel Defence Minister Katz vows to eliminate Khamenei

Next Post
‘ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது’ – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சீற்றம் | Israel Defence Minister Katz vows to eliminate Khamenei

‘ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது’ - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சீற்றம் | Israel Defence Minister Katz vows to eliminate Khamenei

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin