Last Updated:
Mukesh Jangid ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தார். Kerala-யிலும் Anish George இதேபோல் தற்கொலை செய்தார்.
கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்ஐஆர் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையே பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் தொடர்பான பணிகளை நாளை முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவயா் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 45வயதுடைய முகேஷ் ஜன்கித். இவர், ஞாயிறன்று (bindayaka) பிண்டயகா ரயில்வே கிராஸிங்கில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இறப்பதற்கு முன்பாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை முகேஷின் சகோதரர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அதில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள தமக்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாகவும், பணி நீக்கம் செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் உள்ள வேலை அழுத்தம் காரணமாகவே முகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் அனீஸ் ஜார்ஜ் என்பவர் எஸ்.ஐ.ஆர். பணிச்சுமையால் தற்கொலை செய்த நிலையில், தற்போது ராஜஸ்தானிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
November 17, 2025 12:06 PM IST


