Last Updated:
கனமழை தொடர்வதால், சபரிமலை பயணத்தை மறு பரிசீலனை செய்ய பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது
கேரளாவில் கன மழை பெய்த நிலையில் பத்தனம்திட்டாவில் குடியிருப்பு பகுதிகளில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளன. செங்கன்னூர் – ஆரன்முலா சாலையின் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம் அருகே கனமழையால் அங்கன்வாடி கட்டடம் சரிந்தது.
பாலக்காடு கிழக்குஞ்சேரி பாலக்குழி நீர்வீழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு இளைஞர் மீட்கப்பட்டுள்ளார், மாயமான இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கிடையே, கேரளாவில் கனமழை தொடர்வதால், சபரிமலை பயணத்தை மறு பரிசீலனை செய்ய பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aug 02, 2026 10:33 PM IST


