• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்…? யூடியூப் பிரபலம் மீது வழக்குப் பதிவு.. நடந்தது என்ன?  | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரளாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்…? யூடியூப் பிரபலம் மீது வழக்குப் பதிவு.. நடந்தது என்ன?  | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 09, 2026 9:47 PM IST

கேரளாவின் திருச்சூரில், 11 வயது சிறுவன் அளித்த பாலியல் புகாரில் பிரபல பெண் சோசியல் மீடியா இன்புளூயன்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கேரளாவின் திருச்சூரில், 11 வயது சிறுவன் அளித்த பாலியல் புகாரில் பிரபல பெண் சோசியல் மீடியா இன்புளூயன்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர், டாக்டர் நிஷா ரஃபேல். ஆசிரியையாகப் பணியாற்றிய இவர்,  வித்தியாசமான கற்பித்தல் முறைகள், உத்வேகம் அளிக்கும் பேச்சுகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் மூலம் பிரபலமானவர். யூடியூபில் சுமார் 1.27 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 3.76 லட்சம் பேரும் இவரைப் பின்தொடர்வதாகக் கூறப்படுகிறது.

மோட்டிவேஷன் பேச்சாளர் என்ற அடையாளத்துடன் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்ற நிஷா ரஃபேல் மீது, தற்போது சிறுவன் ஒருவன் அளித்த பாலியல் புகாரில், போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன், தனக்கு நிஷா ரஃபேல் பாலியல் தொல்லை அளித்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் திருச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே, சிறுவன் திருச்சூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பரிசோதனையில் சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதற்கான அறிகுறிகள் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவப் பரிசோதனை குறித்த தகவல்கள் மட்டுமே, புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் குற்றத்தை நிரூபிப்பதாகாது.  இதனால் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்து, வழக்கின் விசாரணை முக்கியக் கட்டத்தில் இருப்பதால், கூடுதல் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துள்ளனர். இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என நிஷா ரஃபேல் மறுத்துள்ளார்.  அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்பான தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாகவே, தன்மீது பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுவன் அளித்த பாலியல் புகாரின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமா?  அல்லது நிஷா தரப்பு கூறுவதுபோல், முன்விரோதத்தின் காரணமாகப் பொய்யாக புகார் அளிக்கப்பட்டதா? என்பது போலீஸ் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.

Read More

Previous Post

ஈரான் அணு திட்டம் முறியடிப்பு…! பேரழிவைத் தடுத்ததாக ட்ரம்ப் அதிரடி உரிமைக்கோரல்

Next Post

முக்கிய தடையை உடைத்த வரிக்குறைப்பு – Malaysiakini

Next Post

முக்கிய தடையை உடைத்த வரிக்குறைப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin