• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளாவில் வரலாற்றுச் சாதனை! நாட்டிலேயே முதன்முறையாக AI தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர்.. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரளாவில் வரலாற்றுச் சாதனை! நாட்டிலேயே முதன்முறையாக AI தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர்.. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி அமோக வெற்றி பெற்று, கடந்த பத்தாண்டுகால இடதுசாரி (LDF) ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களைக் கைப்பற்றி UDF கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தனியாக 63 இடங்களை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவின் 24-வது முதலமைச்சராக வி.டி. சதீசன் கடந்த திங்களன்று திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் தனது 20 பேர் கொண்ட அமைச்சரவையுடன் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, இன்று அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவை ஒதுக்கீட்டில், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) துறைக்கென தனி அமைச்சகம் இந்த அமைச்சரவையில் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘செயற்கை நுண்ணறிவு’, தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் ஸ்டார்ட்-அப் ஆகிய முக்கியத் துறைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் மூத்த தலைவரான 74 வயது பி.கே. குஞ்ஞாலிக்குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கேரளாவை தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சியை நோக்கியும், ஏஐ-ஆல் இயங்கும் ஆளுகையை நோக்கியும் கொண்டு செல்லும் முக்கியப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குஞ்ஞாலிக்குட்டி

புதிய முதலமைச்சர் வி.டி. சதீசன் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளார். மேலும், முக்கியத் துறைகளான உள்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சிறைச்சாலைகள் ஆகியவை ரமேஷ் சென்னிதலாவிடமும், மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் சன்னி ஜோசப்பிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறைகள் கே. முரளீதரனுக்கும், வருவாய்த்துறை ஏ.பி. அனில்குமாருக்கும் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைகள் பி.சி. விஷ்ணுநாத்திற்கும், கூட்டுறவு மற்றும் கலால் துறைகள் எம். லிஜுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறையானது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை ரோஜி எம். ஜானுக்கும், பொதுக்கல்வித் துறை என். சம்சுதீனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை டி. சித்திக்கிற்கும், தொழிலாளர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பிந்து கிருஷ்ணாவிற்கும், பொதுப்பணித்துறை கே.எம். ஷாஜிக்கும், நீர்ப்பாசனம் மற்றும் வீட்டுவசதித் துறை மொன்ஸ் ஜோசப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 9.5 லட்சத்தைத் தாண்டியது – Sri Lanka Tamil News

Next Post

விவசாயிகள் அடையாள எண்.. திருவாடானையில் சிறப்பு முகாம்கள்.. வேளாண் உதவி இயக்குநர் அறிவிப்பு !

Next Post
விவசாயிகள் அடையாள எண்.. திருவாடானையில் சிறப்பு முகாம்கள்.. வேளாண் உதவி இயக்குநர் அறிவிப்பு !

விவசாயிகள் அடையாள எண்.. திருவாடானையில் சிறப்பு முகாம்கள்.. வேளாண் உதவி இயக்குநர் அறிவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin