Last Updated:
அனைத்துப் பண்டிகைகளையும் கேரள மாணவர்கள் ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் சிதைக்கப்படுவதை அரசு ஏற்காது.
கேரளாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சில பள்ளிகள் ரத்து செய்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதுபற்றி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் கிறிஸ்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் மற்ற மாநிலங்களை விடவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் சில பள்ளிகள் மாணவர்களிடம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காகப் பணம் வசூலித்துவிட்டு, பின்னர் திடீரென அந்தப் பணத்தைத் திருப்பி அளித்துவிட்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியிருப்பதாவது-
சில பள்ளிகள் மாணவர்களிடம் கொண்டாட்டத்திற்காகப் பணம் வசூலித்துவிட்டு, பின்னர் திடீரென அந்தப் பணத்தைத் திருப்பி அளித்துவிட்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளன. இது குழந்தைகளின் மனதை புண்படுத்தும் ஒரு கொடுமையான செயல்.
ஓணம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்துப் பண்டிகைகளையும் கேரள மாணவர்கள் ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் சிதைக்கப்படுவதை அரசு ஏற்காது.
கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ரத்து செய்த தனியார் பள்ளிகள்.. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு..


