கேமரன் ஹைலேண்ட்ஸ்:
குடிநுழைவு துறை அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் கேமரன் ஹைலேண்ட்ஸின் பல இடங்களில் சோதனை நடத்தியபோது, நுற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படடனர், டஜன் கணக்கான வெளிநாட்டினர் தப்பி ஓடினர்.
கைது செய்வதைத் தவிர்க்கும் முயற்சியில், சிலர் வணிக வளாகங்கள், கட்டுமான தளங்கள் மற்றும் காய்கறி மற்றும் பழ சேகரிப்பு மையங்களில் குறுகிய பாதைகள் வழியாக நழுவ முயன்றனர். மேலும் அவர்கள் வாகனங்கள் மற்றும் கழிப்பறைகளுக்குள் ஒளிந்து கொள்வது உட்பட பல்வேறு தந்திரோபாயங்களை செய்தனர், சிலர் தப்பி ஓட முயற்சிக்கும்போது தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டனர் என்று, குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபன் தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறை மொத்தம் 1,886 வெளிநாட்டினரை பரிசோதித்து, அதில் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியது, விசா காலாவதியான பின்னர் தங்கியிருப்பது மற்றும் பிற குடிநுழைவு விதி மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குடியேற்ற குற்றங்களுக்காக அவர்களில் 468 பேரை கைது செய்தது.
‘ஆப் கெம்பூர்’ என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, தற்காலிக வேலைவாய்ப்புக்கான போலி விசிட் பாஸ்களைப் பயன்படுத்திய வெளிநாட்டினரையும் கண்டுபிடித்ததாக அவர் சொன்னார்.
“அவர்களில் பலர் போலி பாஸ்களைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டனர். இதற்குப் பின்னால் உள்ள மூளையாக இருப்பவர்களை அடையாளம் காண நாங்கள் மேலும் விசாரணைகளை மேற்கொள்வோம், பாஸ்களைப் பெற அவர்கள் கையாண்டிருக்கக்கூடிய முகவர்களைக் கண்டறிவது உட்பட அனைத்தையும் தமது துறை மேற்கொள்ளும் என்றார்.




