ஈப்போ:
கேமரன் மலை–சிம்பாங் பூலாய் i) சாலையில் கம்போங் பெர்கோம் அருகே இன்று கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நான்கு சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் 19, 20 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் என்றும், 21 வயதுடைய ஓர் இளம்பெண் என்றும் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) உறுதிப்படுத்தியுள்ளது.
“விபத்து நடந்தவுடன் காரில் இருந்த மூவர் லேசான காயங்களுடன் பொதுமக்களால் உடனடியாக மீட்கப்பட்டனர். இருப்பினும், ஓட்டுநர் இருக்கையில் பலமாகச் சிக்கியிருந்த 20 வயது இளைஞரை, தீயணைப்புப் படையினர் சிறப்பு மீட்புக் கருவிகளைப் பயன்படுத்திப் போராடி மீட்டனர். அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.” என்று, பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி கூறினார்.
காயமடைந்த நான்கு சிங்கப்பூரர்களுக்கும் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்விபத்து குறித்துப் பேராக் மாநிலக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேமரன் மலை–சிம்பாங் பூலாய் சாலையில் பயங்கரம்: கார் சறுக்கி கால்வாயில் விழுந்து 4 சிங்கப்பூரர்கள் படுகாயம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

