Last Updated:
கடும் கோபமடைந்த தோனி, சாஹரிடம் வந்து கோபமாகப் பேசினார். அந்த நேரத்தில் சாஹர், தனது டெத் பவுலிங் கேரியர் அத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்தாராம்.
கிரிக்கெட் லெஜெண்ட் மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூல் என பரவலாக அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். ஆனால் அவரையே அணி வீரர்கள் சிலர் கோபப்பட வைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
அப்படி தோனியை டென்ஷனாக்கிய வீரர்களில் சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் ஒருவர். ஒருமுறை தோனி ஐபிஎல் தொடரின்போது தீபக் சாஹரிடம் கோபப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபக்கிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டபோது அவர் பதில் அளித்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு-
சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் (முன்னாள் கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இடையே 2019 ஆம் ஆண்டு போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் பேட் செய்த சென்னை அணி 160/3 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெறக் கடைசி 12 பந்துகளில் (19வது மற்றும் 20வது ஓவர்களில்) 39 ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது எம்.எஸ். தோனி, மிக முக்கியமான 19வது ஓவரை (Death Over) வீசும் பொறுப்பைத் தீபக் சாஹரிடம் ஒப்படைத்தார். தீபக் சாஹர் அந்த ஓவரில் தொடர்ச்சியான தவறுகளைச் செய்தார், அது தோனியைச் சோர்வடையச் செய்தது:
அவர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கானுக்கு மெதுவான பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசத் திட்டமிட்டார். ஆனால், பந்து நோ-பால் ஆகி, பவுண்டரிக்கு சென்றது. அடுத்த பந்தும் மீண்டும் நோ-பால் ஆனது. தொடர்ச்சியாக அவர் செய்த தவறுகள் அழுத்தத்தை அதிகப்படுத்தியது.
தோனி தன்னிடம் என்ன சொன்னார் என்பது பற்றி பேசிய தீபக் சாஹர், ‘முட்டாள் நீ இல்லை.. நான் தான் முட்டாள்’ என்று கத்திக் கூறியுள்ளார். அதாவது, முன் அனுபவம் இல்லாதவருக்கு ஓவர் கொடுத்ததற்காக தன்னைத் தானே திட்டிக் கொண்டாராம் தோனி.
November 23, 2025 10:05 PM IST


