• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கேஜ்ரிவாலைவிட அதிஷி ஆயிரம் மடங்கு சிறந்தவர்” – டெல்லி துணைநிலை ஆளுநர் பாராட்டு | Delhi LG rare praise for CM Atishi: Thousand times better than her predecessor

GenevaTimes by GenevaTimes
November 22, 2024
in இந்தியா
Reading Time: 10 mins read
0
“கேஜ்ரிவாலைவிட அதிஷி ஆயிரம் மடங்கு சிறந்தவர்” – டெல்லி துணைநிலை ஆளுநர் பாராட்டு | Delhi LG rare praise for CM Atishi: Thousand times better than her predecessor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லி முதல்வர் அதிஷி, அவருக்கு முன்பு இருந்த முதல்வரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறந்தவர் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முதல்வர் அதிஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய வி.கே.சக்சேனா, “டெல்லியின் முதல்வராக ஒரு பெண் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, அவர் தனக்கு முன்பு இருந்த முதல்வரைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு நான்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் உள்ளன. முதலில் உங்களுக்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். இரண்டாவது, உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். மூன்றாவது, சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். நான்காவதாக, பாலினம் என்ற கண்ணாடி உச்சவரம்பை உடைத்து, அனைத்துத் துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக நிற்கும் பெண்களாக உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

டெல்லியின் முதல்வராக கேஜ்ரிவால் இருந்தபோது, அவருக்கும் டெல்லி ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கேஜ்ரிவால் கடந்த செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்ததை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை பெற்றே மீண்டும் முதல்வர் பதவியில் அமரப் போவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, அதிஷி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

IMF உடனான 3ஆவது கடன் மீளாய்வுக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

Next Post

என்னா அம்பயரிங் இது.. கே.எல்.ராகுல் அவுட்டை திட்டும் நெட்டிசன்ஸ்

Next Post
என்னா அம்பயரிங் இது.. கே.எல்.ராகுல் அவுட்டை திட்டும் நெட்டிசன்ஸ்

என்னா அம்பயரிங் இது.. கே.எல்.ராகுல் அவுட்டை திட்டும் நெட்டிசன்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin