பியுமி ஹன்சமாலி, கெஹெல் பத்தர பத்மே (Kehelbaddara Padmé) என்பவருடனான தனது தொடர்பு குறித்து பொலிஸாரால் (CID) கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து, தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பொலிஸார் (CID) தன்னை விசாரித்தது, அவருடன் பணப் பரிமாற்றம் செய்தாரா என்பது குறித்துதான் என்று பியுமி ஹன்சமாலி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுத்துள்ளார்.
அத்துடன், சட்டவிரோத பணம் அல்லது கறுப்பு பணம் தனக்கு தேவையில்லை என்றும், “நான் தனியாக எழுந்த ஒரு இரும்புப் பெண்மணி” என்றும், தனக்குச் சொந்தமான ‘Piumi Skin Private Limited’ நிறுவனம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
“எனக்கு பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒருவரின் பணம் வேண்டாம். நான் அதைப் பெற்று, வெறுமனே சுடப்பட்டு இறப்பதற்கு விரும்பவில்லை. நான் மிகவும் பயப்படுகிறேன், சத்தியமாக” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெஹெல் பத்தர பத்மேவை தான் எப்போது, எப்படிச் சந்தித்தார் என்பதையும் பியுமி ஹன்சமாலி தனது பதிவில் விளக்கினார்.
அவர் பத்மேவை முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துபாயில் நடந்த ஒரு புத்தாண்டு விழாவில் சந்தித்ததாகவும், அவர் அங்கு நடிகர், நடிகைகளுடன் சென்றிருந்தாகவும் கூறியுள்ளார்.
அப்போது பத்மே தன்னுடைய மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடனும் வந்து தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். என்றும், அப்போது பத்மே, தானும் வெள்ளையாக மற்றும் அழகாக இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு பியுமி தனது ‘Piumi Skin’ தயாரிப்புகளை வாங்கிப் பூசுமாறு கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “அவர் வாங்கிப் பூசி இருப்பார் என்று நினைக்கிறேன். அதுதான் அவர் இவ்வளவு அழகாக இருக்கிறார்” என்று பியுமி நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
பியுமி ஹன்சமாலி, “Piumi Skin” தயாரிப்பைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் வெள்ளையாகவும் அழகாகவும் மாற முடியும் என்று தான் எப்போதும் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்