கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள ஒரு பூங்காவின் காட்சி கோபுரத்தில், திங்களன்று 61 வயது முதியவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். செந்தூல்ல் காவல் நிலையத் தலைவர் அனுவார் பக்ரி அப்துல் சலாம், தடயவியல் பிரிவின் ஆரம்பகட்ட சோதனைகளில், போராட்டத்திற்கான அறிகுறிகளோ அல்லது குற்றச் செயல்களுக்கான கூறுகளோ கண்டறியப்படவில்லை என்று கூறினார்.
நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.மேலதிக பகுப்பாய்விற்காக வேதியியல் துறையினரிடம் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அனுவார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
மன அழுத்தம், மன உளைச்சல் அல்லது ஏதேனும் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் மருத்துவர்களிடம் உதவி நாடலாம் அல்லது 03-7627 2929 என்ற எண்ணில் பெஃப்ரெண்டர்ஸை (Befrienders) அணுகலாம்.



