அதற்குப் பதிலளித்திருந்த இந்திய வெளியுறவுத்துறை, “ஜெர்மனின் கருத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலையீடு. எங்கள் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது, நீதித்துறையின் சுதந்திரத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்துவது போன்ற கருத்துகளையே நாங்கள் காண்கிறோம்” எனக் கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது.


சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்கு இந்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் மத்திய பா.ஜ.க அரசு, CAA சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தியபோதும், அமெரிக்கா அரசு, “இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.