மூதூர் கிழக்கு, கூனித்தீவு – நவரெட்ணபுரம் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா நாளை (10) கூனித்தீவு விநாயகர் ஆலயத்திலிருந்து பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.00 மணிக்கு திருக்கதவு திறத்தல் நடைபெறும்.
நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு பால்குட பவனியும், காலை 10.00 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்று நண்பகல் 12.00 மணிக்கு பூஜையும் இரவு 8.00 மணிக்கு அபிஷேகமும் இரவு 10.00 மணிக்கு பூஜையும் இரவு 11.00 மணிக்கு அம்பாள் உள்வீதி வலம் வருதலும் நடைபெறும்.
தொடர்ந்து ஒவ்வெரு நாளும் திருவிழா சிறப்பு நிகழ்வாக காசுபதி நினைவரங்கில் கலை நிகழ்வுகள் நடைபெறும்.
எதிர்வரும் 17ஆம்திகதி தீ மிதிப்பும் தொடர்ந்து ஆயுத பூஜை நிகழ்வுகளும் இடம்பெறும், அன்று நண்பகல் 12.00 மணிக்கு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
(அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)