முதலில் கூட்டு பட்டா என்பது, ஒரு நிலத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் உரிமையாளராக இருந்தார்கள் என்றால், அந்த நிறத்திற்குரிய பட்டா கூட்டு பட்டாவாகும். அதுவே தனி பட்டா என்றால் அந்த நிலத்திற்கு உரிமையாளராக ஒருவரே இருப்பர். கூட்டு பட்டாவை, தனிப்பட்டாவாக மாற்றுவது எப்படி என்றால், தனிப்பட்டாவாக மாற்ற கூட்டுப்பட்டா மட்டும் போதாது, அதற்காக ஒரு சில ஆவணங்கள் தேவைப்படுகிறது. அது என்ன ஆவணங்கள், எப்படி எங்கு சென்று தனி பட்டாவிற்கு அப்ளை செய்வது என்பதை பற்றி முழு விவரம் தெரிந்து கொள்வோம்.


