கோலாலம்பூர்:
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் எதிர்காலம் மற்றும் தலைமைத்துவம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அதன் முக்கிய இரு தலைவர்களும் நேரில் சந்தித்துத் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
“அல்ஹம்துலில்லாஹ். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டியுள்ளோம்,” என்று டான்ஸ்ரீ முகிடின் யாசின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த முக்கியச் சந்திப்பில் பெர்சத்து பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி, பாஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் மற்றும் பாஸ் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து முகிதீன் யாசின் விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பிஎன் உச்சமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு பாஸ் கட்சி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த இறுதி முடிவை பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் என்று டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சந்திப்பு, கூட்டணிக்குள் பிளவு இருப்பதாக நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
The post கூட்டணியை வலுப்படுத்துவோம்: முகிடின் யாசின் – அப்துல் ஹாடி அவாங் சந்திப்பு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

