Last Updated:
இந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினர், GPS வழிகாட்டுதலின்படி காரை இயக்கியபோது எதிர்பாராத விதமாக ஓடைக்குள் காரோடு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதியினர் கூகுள் மேப்ஸ் வழங்கிய தவறான வழிகாட்டுதலின் காரணமாக தங்களுடைய காரோடு ஓடைக்குள் விழுந்து நூல் இழையில் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. 62 வயதான ஜோசி ஜோசப் என்பவரும் அவருடைய 58 வயது மனைவி ஷீபாவும் மண்வெட்டாம் பகுதியில் உள்ள ஜோசியின் நண்பர் வீட்டிற்கு தங்களுடைய காரில் பயணித்துள்ளனர். காரை GPS வழங்கிய வழிகாட்டுதல்களின் பெயரில் இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று சாலை முடிவடைந்து ஒரு ஓடைக்குள் காரோடு விழுந்துவிட்டனர்.
“சாலை முழுவதும் தண்ணீராக இருந்ததால் சாலை தெளிவாகத் தெரியவில்லை”, என்று அன்று நடந்த நிகழ்வு பற்றி ஜோசி கூறுகிறார். ஓடையின் ஆழமான பகுதிக்கு கார் நகர்வதற்கு முன்னரே ஓட்டுநர் தன்னுடைய சதுரயமான நடவடிக்கை மூலமாக மிகப்பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்த்துள்ளார். கார் முன்னோக்கி நகரும்போது வாகனத்திற்குள் தண்ணீர் நுழைய ஆரம்பித்து விட்டது. எனினும் அந்த தம்பதியினர் விரைவாக செயல்பட்டு கார் கதவுகளைத் திறந்து, தண்ணீர் தங்களை அடித்துச் செல்வதற்கு முன்பு காரிலிருந்து வெளியேறி விட்டனர். “ஒன்றரை அடி மேலும் சென்றிருந்தால் கூட நாங்கள் ஓடையின் ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டு, மிகப்பெரிய விபத்தைச் சந்தித்திருப்போம்”, என்று ஜோசி கூறினார்.
அப்பகுதி மக்கள் மற்றும் அருகில் இருந்த டிம்பர் மில்லைச் சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அறிக்கைகளின் படி, அந்த ஓடைக்கு அருகில் பல்வேறு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனினும் பல ஓட்டுனர்கள் முழுக்க முழுக்க GPS வழிகாட்டுதலை மட்டுமே கவனித்து, இது மாதிரியான விபத்தில் மாட்டிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. எச்சரிக்கையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், டிஜிட்டல் வரைபடங்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக, இது மாதிரியான அடிக்கடி வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே வாகனத்தை இயக்கும்போது கண்மூடித்தனமாக கூகுள் மேப்ஸ் போன்ற டிஜிட்டல் அப்ளிகேஷன்களை மட்டுமே நம்பாமல் ஓட்டுநர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வோடும் இருப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வீண் விபத்துகளில் மாட்டிக்கொள்ள நேரிடும்.
July 26, 2025 12:37 PM IST


