Last Updated:
கேரளாவில் கூகுள் மேப் வழிகாட்டுதலால் பாலகிருஷ்ணன் குடும்பம் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்தது. 5 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கேரளாவில் கூகுள் மேப் உதவியுடன் பயணித்த கார், ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கோட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். இரவு நேரத்தில் வழி சொல்ல யாரும் இல்லாததால், கூகுள் மேப் காட்டும் வழியைப் பின்பற்றி அவர் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சூர் அருகே வந்தபோது காயத்ரிபுழா ஆற்றின் குறிக்கே இருந்த தடுப்பணையைத் தாண்டி கார் ஆற்றில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக அப்பகுதி மக்கள் கார் விபத்துக்குள்ளானதை அறிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் உதவியுடன் காரில் பயணித்த 5 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் கூகுள் மேப் வழித்துணையுடன் பயணித்த கார், கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், திருச்சூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 17, 2025 3:02 PM IST
கூகுள் மேப்பை நம்பி காரை ஓட்டிச்சென்ற கேரள குடும்பத்தினர்… சாலையில் காத்திருந்த அதிர்ச்சி – என்ன நடந்தது?


