இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலே உலகம் நம் கையில் உள்ளது போல் தோன்றுகிறது. அதேபோல், தற்போது அனைவரும் டிஜிட்டல் யுகத்திற்கு மாறியுள்ளனர் என்றே சொல்லலாம். கட்டணங்கள் செலுத்த கூகுள் பே, ஃபோன் பே போன்ற ஆப்களை பயன்படுத்துகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆன்லைன் மோசடி வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி (RBI) தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உங்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றவும், மோசடி செய்பவர்களைத் தண்டிக்கவும் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.


