Last Updated:
பெர்பிளக்சிட்டி ஏஐ-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 2017-ல் ஐஐடி மெட்ராஸ்-ல் மின் பொறியியலில் இரட்டைப் பட்டம் பெற்றார். பின்னர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி-யில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர், கூகுளில் பணியாற்றிய அனுபவத்துடன், இன்று ஓபன் ஏஐ-யின் சேட்ஜிபிடி-க்கு வலுவான போட்டியாளராக விளங்கும் ஏஐ தளத்தை வழிநடத்தி வருகிறார். உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் ஒன்றான கூகுள் குரோமை, மூன்று வயதான ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்பிளக்சிட்டி ஏஐ வாங்க முன்வந்துள்ளது. அதற்காக, 34.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.3,02,216 கோடி ஆகும்.
ராய்ட்டர்ஸ் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஆல்ஃபாபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான குரோமை வாங்க பெர்பிளக்சிட்டி, கோரப்படாத முழு பணச் சலுகையை வழங்கியுள்ளது. இதற்கு முன்பு, பெர்பிளக்சிட்டி ஜனவரியில் டிக்டாக் அமெரிக்காவுக்கும் இதேபோன்ற சலுகையை வழங்கி இருந்தது.
பெர்பிளக்சிட்டி ஏஐ குரோம் பிரவுசரை வாங்குவதன் மூலம், குரோமின் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர் வட்டாரம் பெர்பிளக்சிட்டிக்கு கிடைக்கும். இது ஏஐ தேடல் போட்டியில் முன்னிலை வகிக்க இது மிகப்பெரிய பலனாக இருக்கும். பெர்பிளக்சிட்டி ஏற்கனவே காமெட் எனும் ஏஐ பிரவுசரை வழங்குகிறது, இது பயனரின் சார்பாக பல பணிகளை செய்யும் திறன் கொண்டது. ஆனால், குரோம் போன்ற உலகளாவிய பிரவுசரின் பயனர்கள் கிடைத்தால், ஓபன்ஏஐ போன்ற முன்னணிப் போட்டியாளர்களுக்கு எதிராக போராடுவதற்கான பலம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
பெர்பிளக்சிட்டி ஏஐ-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 2017-ல் ஐஐடி மெட்ராஸ்-ல் மின் பொறியியலில் இரட்டைப் பட்டம் பெற்றார். பின்னர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி-யில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
2022-ல் ஆண்டி கோன்வின்ஸ்கி, டென்னிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ ஆகியோருடன் சேர்ந்து பெர்பிளக்சிட்டி ஏஐ-ஐ நிறுவினார். நிவிடியா மற்றும் ஜப்பானின் சாஃப்ட் பேங்க் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டியுள்ள இந்த நிறுவனம், கடைசியாக 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் இருந்தது.
2018-ல் ஓபன்ஏஐ-ல் ஆராய்ச்சி பயிற்சியாளராக (Research Intern) தொடங்கிய அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பின்னர் கூகுள் (2020–2021) மற்றும் டீப்மைண்ட் நிறுவனங்களிலும் பணியாற்றினார். பெர்பிளக்சிட்டி ஏஐ-யை தொடங்குவதற்கு முன்பாக, அவர் ஓபன்ஏஐ-ல் மீண்டும் ஆராய்ச்சி விஞ்ஞானியாக (Research Scientist) பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உலகளாவிய மேடையில் உருவாக்கும் தாக்கத்தையும், ஏஐ மற்றும் பிரவுசர் தொழில்நுட்பத்தின் எதிர்கால போட்டிகள் எவ்வளவு தீவிரமடைகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறது. பெர்பிளக்சிட்டி ஏஐ-யின் இந்த திட்டம், கூகுள் குரோமை வாங்கும் ஒரு சாதாரண ஒப்பந்தம் மட்டுமல்ல, அது தேடல் மற்றும் பிரவுசிங் அனுபவங்களை மறுவரையறை செய்யும் உயர்மட்டப் போட்டியின் அடுத்த கட்டத்தைக் குறிக்கிறது.
August 17, 2025 3:30 PM IST
கூகுளில் பணியாற்றியவர், தற்போது ரூ.3.02 லட்சம் கோடிக்கு கூகுள் குரோமையே விலை பேசியுள்ளார்…! யார் அந்த இந்தியர் தெரியுமா…?


