கூகுளின் புதிய ஏஐ Playground.. இனி கோடிங் இல்லாமல் வீடியோ கேம் உருவாக்கலாம், கேமரா இல்லாமல் சினிமா எடுக்கலாம்
ஏஐ துறையில் அதிரடியான முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டாலும் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் பல ஏஐ சேவைகளை அடுத்தடுத்து டெக் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகிறது.
உதாரணமாக மெட்டா அறிமுகம் செய்த MUSE, ஓப்பன்ஏஐ அறிமுகம் செய்த Dots வரிசையில் கூகுள் தற்போது சாமானிய மக்களை கேம் டெவலப்பராகவும், வீட்டில் இருந்தப்படியே கேமரா கூட இல்லாமல் சினிமா எடுக்கும் டைரெக்டராக மாற்றும் 2 சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

உலகளவில் மிகவும் கிரியேட்டிவ் துறையாக பார்க்கப்படும் கேம் டெவலப்பிங் துறை, பெரிய அளவிலும், வேகமாகவும் வளர்ச்சி அடைய முடியாமல் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய நிலைக்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப திறன் பற்றாக்குறை, இதனால் இத்துறை தேக்க நிலையை அடைந்துள்ளது.
இதை சரியாக உணர்ந்த கூகுள் தனது ஜெனரேட்டிவ் ஏஐ மாடலான ஜெனிமி உடன் யூனிட்டி என்ற கேம் டெவலப்மென்ட் தளத்தை இணைத்து எவ்விதமான கம்பியூட்டர் கோடிங் இல்லாமல் ப்ராம்ட் வாயிலாகவே கேம்களை உருவாக்கும் Playground என்ற சிறப்பு ஏஐ தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதேபோல் சினிமா தயாரிக்க FLOW என்ற ஏஐ டூலை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.
இந்த இரு தளத்தின் அறிமுகத்தின் மூலம் கூகுள் வெறுமனே சார்பாட், புகைப்படம் உருவாக்கும் ஏஐ தளமாக இல்லாமல் பொழுதுபோக்கு துறையில் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளது.
இதில் Playground என்னும் தளம் கேம் டெவலப்மென்ட்டில் இருக்கும் பல்வேறு தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க உள்ளது. இதேபோல் சொல்ல முடியாத கதைகளையும், சொல்ல துடிக்கும் கதைகளையும் ஏஐ மூலம் உருவாக்க Google Flow மூலம் உருவாக்க சூழலை சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் கேமிங் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்துள்ளது மூலம் புதிதாக பலர் இத்துறைக்கு வருவது மட்டும் அல்லாமல் மக்கள் விரும்பும் அதிகப்படியான கேம்களை உருவாக்கி அதை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யும் காலம் விரைவில் வர உள்ளது, இது 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கேமிங் துறைக்கு ஜாக்பாட் ஆக மாறும்.
இதற்காக யூனிட்டி நிறுவனத்தின் லேட்டெஸ்ட் தொழில்நுட்பமான Unity Spark-ஐ ஜெமினி உடன் இணைக்கப்பட்டு Playground தளம் அறிமுகம் செய்துள்ளதாக யூனிட்டி சிஇஓ மேத்யூ பரூம்பெர்க் தெரிவித்துள்ளார்.
கூகுள் கேமிங் துறைக்காக Genie 3 world என்ற பிரத்யேக மாடலை உருவாக்கியிருந்து குறிப்பிடத்தக்கது. இதேபோல் கூகுள் ப்ளோ தளத்தில் இந்தியாவில் இருக்கும் WIF என்ற அமைப்புடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

