குவைத்தில் இருக்கும் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் வெளிநாட்டவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறும் நிலையில், அதில் இந்தியர்கள் எத்தனை பேர் என்று பார்க்கலாம்.
குவைத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 இந்தியர்கள் உள்பட மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர். குவைத் நகரில் தெற்கில் உள்ள மங்காஃப் பகுதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (ஜூன் 12) நடைபெற்றது. தீவிபத்து நடந்த 6 மாடிக் கட்டடத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவரவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், குவைத் தீவிபத்தில் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரின் நிலை நன்றாக இருப்பதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த பெரும்பாலான இந்தியர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 20 – 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குவைத் உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்களுடன் 195க்கும் மேற்பட்டோர் இந்த கட்டடத்தில் வசித்துள்ளனர்.
இதையும் படிக்க:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனுக்கு 25 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் அதிரடி
குவைத்தில் கிட்டத்தட்ட 48 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அதில் சுமார் 21% பேர் இந்தியர்கள். அதாவது சுமார் 10 லட்சம் பேர் இந்தியர்கள். குவைத்தின் சிவில் தகவல்களுக்கான பொது ஆணையம் (PACI) அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் குவைத் மக்கள் தொகை 48 லட்சம். அதில் சுமார் 15 லட்சம் பேர் மட்டுமே உள்ளூர் மக்கள். மற்ற 33 லட்சம் பேர் அனைவரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் தொழிலாளர்களாக குவைத்துக்கு வந்தவர்கள் 61% பேர். குறிப்பாக, குவைத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள்.
பெரும்பாலான இந்தியர்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள், பட்டயக் கணக்கர்கள், விஞ்ஞானிகள், மென்பொருள் வல்லுநர்கள், மேலாண்மை ஆலோசகர்கள், கட்டடக் கலைஞர்களாக பணிபுரிந்து வரும்நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள் போன்ற பணிகளிலும் இந்தியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இவ்வாறு இந்தியர்கள் 50% பேர் பணிபுரிந்து வந்தாலும், எஞ்சியுள்ள 50% இந்தியர்கள் உடல் உழைப்பை சார்ந்த வேலைகளுக்கே வந்துள்ளதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு.. அதிரடி முடிவு எடுத்த மத்திய அரசு
உதாரணமாக, துபாயில் தச்சர்கள், மேசன்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிளம்பிங் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இந்திய மதிப்பில் குறைந்தபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதைவிட, கனரக வாகன ஓட்டுநர்கள், வீட்டுப் பணியாளர்களுக்கு அதிக அளவில் ஊதியம் கிடைக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
