பின்னர், இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளிகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தற்போது வெளியான அறிக்கையில், அவரது குடும்பத்தினர் அவருக்கு வரவேண்டிய தொகை அனைத்தும் கிடைக்காமல், அவரது உடலை வாங்க மாட்டோம் என மறுத்து வந்ததால், இந்த நடவடிக்கைகள் தாமதமானதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின், குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று முறையாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து, அவரது உடல் இன்று (ஜூலை 31) மாலை 3.45 மணியளவில் பிர்சா முண்டா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டும் ஏர் இந்தியா! தில்லி – லண்டன் விமானம் ரத்து! ஏன்?