திருவனந்தபுரத்தை சேர்ந்த குவாரி உரிமையாளரை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், இறந்த நபர் தான் தன்னை கொலை செய்ய சொன்னதாக கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த கூற்றை போலீசார் ஏற்று கொள்ளவில்லை.
திருவனந்தபுரத்தை சேர்ந்த 46 வயதான தீபு சோமன் என்பவர் தமிழ்நாட்டில் இருந்து மண் அள்ளும் இயந்திரம் வாங்கும் எண்ணத்தில் (ஜேசிபி இயந்திரம்) சில நாட்களுக்கு முன் ரூ.10 லட்சத்துடன் வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழக – கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் காரில் கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 59 வயதுடைய அம்பிலி என்கிற சஜிகுமார் இறந்தவரின் நண்பர் என கூறப்படுகிறது. இவர் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த தமிழக போலீசார் மாற்றுத்திறனாளி போன்ற ஒரு நபர், குற்றம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கி வெளியே செல்வதை கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: Jackfruit Season: யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிட கூடாது… மருத்துவர் சொல்வது என்ன..?
இதனிடையே கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்பிலி, இறந்த தீபு ஏற்கனவே அறிவுறுத்தியபடி குற்றம் நடந்த பிறகு நொண்டி நொண்டி நடந்ததாக கூறியுள்ளார். மேலும் கொலை சம்பவத்தின் போது தான் அணிந்திருந்த ஆடைகளை தனது வீட்டிற்கு அருகில் எரித்ததாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழக காவல்துறை நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நடத்திய விசாரணையில், அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பிளேடை கொண்டு இந்த கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அறுவை சிகிச்சை பிளேடு, முககவசம், கையுறை, மற்றும் மயக்கமருந்தாக பயன்படுத்தப்படும் குளோரோஃபார்ம் ஆகியவற்றை அம்பிலிக்கு கொடுத்த அவரது நண்பரும், அறுவை சிகிச்சை கருவி நிறுவன உரிமையாளருமான சுனில்குமார் என்பவரையும் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கத்தி மற்றும் எரிந்த துணிகளின் எச்சங்களை போலீசார் மீட்டனர்.
பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அம்பிலி, இறந்த தீபுவுடன் நட்பு கொண்டார் என போலீசார் கூறுகின்றனர். இருப்பினும் இது ஒப்பந்த கொலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. கொலையுண்ட தீபுவின் காரில் இருந்து காணாமல் போன ரூ.10 லட்சத்தில், அம்பிலி மற்றும் அவரது நண்பரின் வீடுகளில் இருந்து ரூ.7.5 லட்சம் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ”கிலோவுக்கு ரூ.300 வரை கிடைக்கிறது” இலைக்கோசு சாகுபடியில் லாபம் அள்ளும் விவசாயிகள்…
இந்த குற்றம் எதற்காக நடைபெற்றுள்ளது என்பதற்கான நோக்கம் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மாநில காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளின் கூற்றுப்படி, தீபு சோமனிடம் அம்பிலி ஊதியம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே அம்பிலியுடனான தீபுவின் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)